தமிழில் ’கேடி’ படத்தில் அறிமுகமானவர் இலியானா. பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஷங்கர் இயக்கிய ’நண்பன்’ படத்தில் நடித்தார்.
இப்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூவை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது.
இதுபற்றி கேட்டபோது, ‘எனது கடந்த காலத்தை பற்றி பேசுவதை விரும்பவில்லை. அதோடு எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும் பேசமாட்டேன். இதை நான் பலமுறைச் சொல்லிவிட்டேன். இதை நான் மறைக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.
எல்லாம் வெளியே தெரிந்துவிட்டது. இதற்கு மேல் இதுபற்றி அதிகமாகக் கேட்காதீர்கள் என்று ஒரே போடாக போட்டார். எது எப்படியானாலும் சரி, ரசிகர்கள் தனக்கு முக்கியம் என்பதை போல, அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பார்.
இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில், இது என்னுடைய செக்ஸியான முகம் என்று கூறியுள்ளார். கவர்ச்சி உடையில் அப்படி இப்படி உடலை அசைத்து ஆட்டம்போடும் அவரது வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.