லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.
பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது கிழிந்த ஜீன்ஸுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இவரை வில்லி என திட்டி தீர்த்த இளசுகள் இவரது இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து இவரை ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது.
அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது. இதனால் `ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி’ சீரியலில் நடித்து வந்தார். தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம். சீரியல்களில் ஹீரோயின்கள் விட வில்லிகளாக வரும் நடிகைகள்தான் மக்களுக்கு பிடிக்கிறது.
அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருக்கும் காயத்ரி யுவராஜ், இணையதளங்களில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார். முத்தழகு என்னும் கதாபாத்திரமாக காயத்ரி, ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார்.
இந்த சீரியலில் அவர் செய்யாத வெறுக்கத்தக்க விஷயங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அதுதான் இவருக்கான பிளஸ். இவர், இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.