பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு முற்றிலும் மாறுபட்டவர்.
சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
ஜாக்லினின் அடையாளமே அவரது கீச் குரலும் பப்லியான தோற்றமும் தான். ஆனால், கடந்த சில காலமாக தனது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்திருக்கிறார்.
தற்போதய கால கட்டத்தில் சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றிருக்கிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாதி பேர் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அதில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் தான்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவில் நடிகையாக ஜொலிக்க முயற்சி செய்பவர் விஜய் டிவி ஜாக்லின்.
இந்தநிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாக்லின் சமீபத்தில் இறுக்கமாக உடை அணிந்து செம்ம உடல் வாகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “மொரட்டு கட்ட.. செம்ம ஹாட் பேபி” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.