தமிழில் பல படங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணனுக்கு 1989-ல் சுட்ரதருலு என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் படம் சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.
இதனால் 90களில் தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தார். இந்தச் சூழலில், கோலிவுட்டில் நடித்து கவனம் பெற வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
தெலுங்கில் கவர்ச்சி நடிகையாகப் புகழ் பெற்ற ரம்யா கிருஷ்ணன், அம்மன் படத்தில் அம்மனாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. 80களில் நடித்த எல்லா நடிகைகளும் எந்த மொழியில் நடித்தாலும் அதே மொழியில் டப் செய்தார்கள்.
ஆனால் என்னுடைய குரல் தமிழில் பலமுறை தவிர்க்கப்பட்டுள்ளது. படையப்பாவுக்குப் பிறகு தான் என் குரலுக்குத் தமிழில் அங்கீகாரம் அளித்தார்கள் என்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
1999-ல் வெளியான படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக நீலாம்பரி வேடத்தில் நடித்தது இவருடைய திரை வாழ்க்கையையே மாற்றியது. படம் பெரிய ஹிட் ஆனது மட்டுமல்லாமல் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் பேரும் புகழும் அடைந்தார்.
இதன்பிறகு நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கமலுடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு மேலும் மகுடம் சூட்டியது. சிம்ரன் நடித்திருந்தாலும் மேகி வேடத்தில் நடித்து பெயர் வாங்கிச் சென்றது ரம்யா கிருஷ்ணன் தான்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி என பல்வேறு
மொழிகளில் நடித்துள்ளார் இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் 35
வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
50 வயதை கடந்துள்ள ரம்யா
கிருஷ்ணன் அவர்கள் இதுவரையிலும் இளம் நடிகையை போல இவரும் தனது சமூக
வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை
திக்குமுக்காட செய்து வருகின்றார்.
மறுபக்கம் இவரது ரசிகர்கள் இவருடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பகிருந்து சிலாகிப்பதும் உண்டு. அந்த வகையில், நீச்சல் உடையில் தோன்றிய ரம்யா கிருஷ்ணனின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.