நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்து இயக்கும் படம் ‛டாக்டர்’. சிவகார்த்திகேயன் தயாரித்து, நடிக்கிறார்.
அனிருத் இசை அமைக்கிறார். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பவர் பிரியங்கா அருள் மோகன். இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்ந்த் கத ஹெல்ல என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் கேங் லீடர் படத்தில் நானி ஜோடியாக அறிமுகமானார்.
அடுத்து மாயன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜே.ராஜேஷ் கண்ணன் இயக்கும் இந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் பிரியா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம்.பாண்டியராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியது.
இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த வாய்ப்பை பிரியா அருள் மோகன் தட்டி பறித்து இருக்கின்றார். முதல் படம் நடித்து வெளியாகும் முன்பே முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகயுள்ளார் பிரியங்கா அருள் மோகன்.
இந்நிலையில், தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ரெக்கை மட்டும் தான் இல்ல.. தேவதை.. என்று வர்ணித்து வருகிறார்கள்.