கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது பிரியாணி. தமிழ் மொழியில் வெளியான ப்ளாக் காமெடி மற்றும் கிரைம் படம். படத்தை வெங்கட் பிரபு எழுதி இயக்கியயிருந்தார்.
ஸ்டுடியோ கிரீன் தயாரித்த, இதில் கார்த்தி, பிரேம்கி அமரன், மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களிளலும் நாசர், ராம்கி, சம்பத் ராஜ், மதுமிதா, ஜெயபிரகாஷ், பிரேம், மற்றும் மாண்டி தகார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்ததிருந்தார்.
பிரியாணியின் பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவை யுவன் சங்கர் ராஜா கையாண்டார். சக்தி சரவணன் மற்றும் பிரவீன் ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை கையாண்டனர்.
படப்பிடிப்பு நவம்பர் 2012 இல் தொடங்கியது, ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நீடித்தது மற்றும் முதன்மையாக சென்னை, ஹைதராபாத் மற்றும் அம்பூரில் நடந்தது. இந்த படம் 20 டிசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.
இந்த படம் 2016 ஆம் ஆண்டில் கோல்ட்மைன்ஸ் டெலிஃபில்ம்ஸால் டம் பிரியாணி என இந்தியில் டப்பிங் செய்யப்பட்டது. படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மேண்டி தாகர்.
படத்தில் இடம் பெற்ற மிஸ்ஸிஸிப்பி நதி என்ற பாடலில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார் அம்மணி. யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இந்த படமே இவருக்கு முதல் தமிழ்ப்படம் மற்றும் கடைசி தமிழ் படமுமாக அமைந்து விட்டது.
அதன் பிறகு, 2016-ம் ஆண்டு வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆடி காரு லேடி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். தற்போது, பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.