ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் ஒரே நாளில் பிரபலம் ஆனவர் தான் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த பாடல் அவரின் கண்ணசைவு காரணமாக மிகவும் வைரலானது.
இவரது அந்த கண்ணசைவு பட்டி தொட்டி எங்கும் வைரலாக பரவி பலரை கிறங்கடிக்க வைத்தது என கூறலாம்.அவரை வைத்து மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிப்பவர் பிரியா பிரகாஷ் வாரியார். இந்த படத்தின் 2 நிமிட டீசர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு துபாய் ஓட்டலின் குளியலறை நீர்த்தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த காட்சியை சித்தரிக்கும் வகையில் குளியல் தொட்டியில் கால் மட்டுமே தெரியும் வகையில் படமாக்கப்பட்ட காட்சி ‘ஸ்ரீதேவி பங்களா’ டீசரில் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
இதில் செலிபிரிடீயாக வளம் வரும் பிரியா மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்ற காட்சிகளும் வருகிறது. இறுதியில் டைட்டில் வரும்போது ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை குறிக்கும் வகையில் குளியல் தொட்டியில் இரண்டு கால்கள் மட்டும் காட்டப்பட்டவாறு டீஸர் முடிக்கப்படுகிறது. அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.
இந்த நிலையில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் அடிக்கடி அவரது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.
அந்த வகையில் தற்போது தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சி ஓவர் மா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.