“ப்ப்பா… இது என்ன உடம்பா.. இல்ல, ரப்பரா…” – தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். 

 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 

 

சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் நடித்திருந்தார் அதைத்தொடர்ந்து மீண்டும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார். 

 

 

விஜய்யுடன் இணைந்து நடித்த 2 திரைப்படங்களும் ஹிட்டடித்த நிலையில் மூன்றாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். 

 

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத் சேட்யூல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ரஜினிக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இடையேயான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா, குஷ்பூ ,மீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும், கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் வெளியான ‘RangDe’ படத்தில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியுள்ளார். 

 

இந்நிலையில், உலக யோகா தினமான நேற்று யோகா செய்வதன் முக்கியத்துவத்தை வலியிருத்தும் விதமாக மொட்டை மாடியில் யோகா செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

உடம்பை ரப்பர் போல வளைத்து ஆயாசமாக யோகா செய்யும் அவரை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா.. இல்ல.. ரப்பரா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version