லீசா எக்லேர்ஸ் என்னும் பெயரை சொன்னால் யாருக்கும் ஞாபகத்திற்கு வராது .ஆனால் கண்மணி சீரியல் சௌந்தர்யா என்று சொன்னால் டக்கென்று நினைவிற்கு வந்து விடுவார் .
ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பேரையும், புகழையும் இவருக்கு இந்த கண்மணி சீரியல் வாங்கி கொடுத்துவிட்டது .
சீரியலில் சவுண்டாக இவர் கண்ணன் மாமாவின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் ஒட்டிக் கொண்டார்.சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலுக்கு பல ரசிகர்கள் அடிமைகளாக மாறிவிட்டனர்.
தற்போது இந்த சீரியல் முடிவடைந்து இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் இதில் நடித்தவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர் .அதிலும் அதன் கதாநாயகியை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு இணையாக இவர் நடித்து வந்த சீரியல் முடிவடைந்து விட்டாலும் இவருடைய பெயரை சொன்னதுமே சீரியல் ரசிகர்களின் மனதில் அவருடைய அமைதியான குணமும் , சகிப்புத்தன்மையும் தான் நினைவிற்கு வருகிறதாம்.
அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் அந்த சீரியலின் கண்ணன் மாமாவின் சவுண்டாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் சௌந்தர்யாவாகவும் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து இருக்கிறார்