மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. த்ரிஷாவையும், விஜய் சேதுபதியும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டார்.
ஏதோ சின்ன வயசு த்ரிஷாவையே நேரில் பார்த்த மாதிரி ரசிகர்கள் கெளரி கிஷனை கொண்டாடினார்கள். அமைதியான நடிப்பும், இளமையான அழகும் இன்று வரை பலரது கண்களையும் விட்டு நீங்கவில்லை.
தமிழில் இதுவரை முழு கதாநாயகியாக நடிக்காமல் இருக்கும் இவர் மலையாளத்தில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்தவகையில் இப்பொழுது அனுகிரகீதன் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்க அதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.
கௌரி கிஷன் இளம் நடிகையாக இருந்தாலும்
முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டிருக்க இவரை
சமூக வலைதளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
ரசிகர்களுக்காக
வழக்கத்தை விடவும் செம அழகாக பார்க்க பொம்மை போல நின்று கொண்டிருக்கும்
கௌரி கிஷன் அதில் கவர்ச்சியும் கொஞ்சம் தெரிகின்றவாறு இருக்கும்
புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்ததோடு பலரும் வர்ணித்து
வருகின்றனர்.