குட்டியான ஸ்கர்ட் – முழு தொடையும் தெரிய விருது விழாவை கலக்கிய திரிஷா..! – வைரலாகும் புகைப்படம்..!

கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின். 

 

எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ‘ஐகான்’ ஆக இருக்கிறார். பெற்றோருக்கு ஒரே மகளான த்ரிஷா 1983-ஆம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார். 

 

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்த அவர், சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் பெற்றார். பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். 

 

ஒரு நகைக்கடை விளம்பரம் மூலம் கவனம் பெற தனது முதல் பட வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்தது. அதே நகைக்கடை விளம்பரத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்தவர் சமந்தா என்பது கூடுதல் தகவல்.‘96’ திரைப்படம் மூலம் ஜானுவாக ரசிகர்களின் மனதில் இன்னமும் அழுத்தமாக பதிவாகி, தொடங்கிய புத்துணர்ச்சியுடனேயே தனது திரைப்பயணத்தை இன்னமும் தொடர்ந்து வருகிறார் த்ரிஷா. 

 

திரைப்படம் தாண்டி யோகா, செல்லப்பிராணிகள், வெளிநாடு சுற்றுலா என த்ரிஷாவுக்கு பிடித்த பக்கங்கள் ஏராளம். வெறும் பாட்டுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே கதாநாயகிகள் என்பதை உடைத்து படத்துக்கு பலமாக நின்று, இன்றும் சினிமாவில் நீடிக்கும் த்ரிஷா, புதிதாக கால்பதிக்கும் கதாநாயகிகளுக்கு முன்னுதாரணம் என்றும் கூறலாம். 

 

இந்நிலையில், விருது விழா ஒன்றில் குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரிய வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version