காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா மோகன். அதன்பிறகு ஒரு சில படங்கள் நடித்தார் பின்பு ஜெயம் கொண்டான் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் இவர் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் இவருடைய திறமையும் அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
பின்பு முதல் படத்தில் எப்படி விஜய் படத்தில் நடித்தாரோஅதேபோல பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவான வேலாயுதம் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து விஜய் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய நடிகையாக பிரபலமானார்.
வேலாயுதம் திரைப்படம் வெளியான பொழுது இவருக்கு பெரிய அளவில் சினிமாவில் வரவேற்புகள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராமல் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில படங்கள் நடித்தார்.
பின்பு சினிமாவிற்கு விடை கொடுத்து பல வருடமாக காதலித்த தன் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. தற்போது தன் 2 குழந்தைகளும் இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பார்க்கப்பட்டுவைரலாகி வருகின்றன.