தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸான `சூரரைப் போற்று’ படத்தில் ஹீரோ சூர்யாவைவிடவும் அதிகம் பேசப்படுகிறார் நாயகி அபர்ணா பாலமுரளி.
பொம்மி என்ற கேரக்டராகவே வாழ்ந்துகாட்டிய நடிப்புக்கு மட்டுமன்றி, மதுரை ஸ்லாங்கில் சொந்தக் குரலில் பேசியதற்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
இதன்பின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கநாயகியாக காலடி பதித்தார்.
இதனை தொடர்ந்து சர்வம் தாளமயம், எனும் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஆனால் இவையெல்லாம் விட, சூர்யாவுடன் சூரரை போற்று படத்தில் நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.
கேப்டன் ஜிஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான சூரைப்போற்றுப்படத்தி பொம்மி என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து அசத்தி இருப்பார் அபர்ணா.
இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.அபர்ணா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஜாக்கெட்டை கிழித்து விட்டு, வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
ஒரு காலில் லெக்கின்ஸும் மறு காலில் புடவையை சுற்றி அல்ட்ரா மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அக்மார்க் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு..என்று வர்ணித்து வருகின்றனர்.