மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தெலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற ’மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர்.
பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி-25ம் தேதியன்று அவரது 26-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பகிர்ந்த ”எனக்காக சூரியன் இன்று சற்று அதிகமாகவே பிரகாசித்துள்ளது. பூமியில் வாழும் மிக அற்புதமான நபரான எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தனக்குதானே வாழ்த்துகள் கூறிக்கொண்டார்.
மேலும் ஒரு அடி மேலே போய்,’என் பிறந்தநாள் ஒரு விடுமுறை நாளாக இருக்கவேண்டும்,’ என்றும் பெருமையாக பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ஒருபுறம் நகைக்குக்குரியது போல் தோன்றினாலும் அவரது ரசிகர்கள் இதை சமூகவலைதளத்தில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.
இதுவரை இந்த பதிவிக்கு இன்ஸ்டாகிராமில் 14லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல் டிவிட்டரிலும்,’ஊர்வசி ரவுத்தலா’ என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டானது.தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ரவுத்தலோ உடன் நடிக்கிறார்.
2013-ம் ஆண்டு ‘Sing Saab the Great’ என்ற ஹிந்திப் படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார் ஊர்வசி. அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், வங்காளம் என்று ஒரு ரவுண்டு அடித்திருக்கிறார். ‘மிஸ் டிவா’ பட்டத்தையும் வென்றவர். தற்போது 27 வயதாகும் ஊர்வசி ஏற்கெனவே திருமணமானவர். இருந்தாலும் தற்போதும், ஆடைக் குறைப்புக்கும் அஞ்சாமல் கலைச் சேவை செய்து வருகிறார்.
தமிழில் இதுதான் இவரது முதல் படமாகும். இந்நிலையில், நீச்சல் குளத்தில் கையில் மலைப்பாம்பை வைத்துக்கொண்டு சாவகசமாக போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் என்ன துணிச்சல்.. அடேங்கப்பா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.