“நெஞ்சு கிழிஞ்சுருச்சே..ஏ..ஏ..ஏ…” – காஜல் அகர்வால் வெளியிட்ட ஒற்றை செல்ஃபி – கண்ணீர் விடும் சிங்கிள் பசங்க..!

 

பாரதி ராஜாவின் இயக்கத்தில் உருவாக பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான காஜல் அகர்வால், அம்சமான நடிகை என பெயர் எடுத்த இவர், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

 

தமிழ் , தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் வெளியான மஹதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றதால் தமிழில் இவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.

 

அண்மையில் இவர், கௌதம் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மானின் ஹே சினாமிக்காவிலும் நடித்து வருகிறார். 

 

இவர் கடைசியாக லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரிலுல் நடித்துள்ளார்.தற்போது கொரோனாவின் 2வது அலை இந்தியாவையை குலுக்கி வருகிறது. இதனால் தொற்று மேலும் பரவாமல் இருக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூடல் என புது கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

 

இதனால் படங்களில் பிசியாக நடித்த நடிகர் நடிகைகள் வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர். வீட்டில் இருப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். 

 

இந்நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் தனது கணவரை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்து என்னுடைய சப்போர்ட் சிஸ்டம் என்று கூறி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். 

 

இதனை பார்த்த சிங்கிள் பசங்க, சட்ட கிழிஞ்சிருந்த தச்சி முடிச்சிடலாம்.. நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்க முறையிடலாம் என்று கண்ணீர் வீட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version