திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா.
பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
இதுதவிர பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய நடிகை மீனாவிடம், ரசிகர் ஒருவர் ‘பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், அதை நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படுத்தும் விதமாக, “தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, நடிகை மீனா நீங்கள் கொஞ்சம் லேட்… என யாரும் எதிர்பாராத வண்ணமாக மிகவும் கூலாக பதிலளித்து, தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.