நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் தவிர மற்ற இரண்டு மொழிகளிலும் நடிப்புடன் கூடிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
படங்களில் மட்டுமல்லாது சில ஆங்கில இதழ்களின் அட்டை பக்கத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஆங்கில இதழின் அட்டை பக்கத்தில் ஸ்ருதியின் கவர்ச்சி படங்கள் இடம்பெற்றிருந்தன.
காதல் தோல்விக்கு பிறகு சிலகாலம் தனிமையில் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது நடிப்பில் தற்போது தெலுங்கில் கிராக் என்ற படம் உருவாகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் லாபம் படம் சமீபத்தில் தான் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் ரசிகர்களை குஷிப்படுத்தும் அதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில்கூட நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் மிரள வைத்த ஸ்ருதிஹாசன், தற்போது செம கவர்ச்சியான உடையில் பட்டாம் பூச்சி போல போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அடிக்குற வெயிலுக்குயாரு ட்ரெஸ் எல்லாம் போடுறதுன்னு வெறும் ப்ரா-வோட நிக்குறீங்களா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.