சித்து பிளஸ் 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவன், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன்.
தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கொரோனா 2வது அலை காலத்தில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருவதாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசன் விதிமுறைகளை மீறி நடக்கும் படப்பிடிப்புகளை தடை செய்யுங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் விதிமுறைகளை மீறி (அன்அபீசியல்) எப்படி நடந்து வருகின்றன.
மக்களின் உயிர் முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல் அமைச்சர் இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது. அதே வேளையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சாந்தினி.