பட வாய்ப்புகளை அள்ளும் பிகில் பட நடிகை ரெபா மோனிகா..!

பிகில் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடிச்ச பொண்ணா இது ? என்று ஓவ்வொரு ரசிகர்களும் வாயை பிளந்த வண்ணம் இருக்கிறார்கள். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. 

 

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் ஆசிட் வீச்சு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான். 

 

முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கணிசமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் திடீரென தன்னுடைய காதலரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ரெபா மோனிகா.

 

ரெபா மோனிகா தன்னுடைய நீண்ட காலம் சோமன் ஜோசப் என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துபாய் சென்றிருந்த இடத்தில் ஜோசப் தன்னுடைய காதலை சினிமா ஸ்டைலில் மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார்.

 

உடனடியாக அவரது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் ரெபா மோனிகா. கேரியரை பற்றி கவலைப்படாமல் உடனடியாக காதலுக்கு ஒத்து கொண்டு விரைவில் திருமணம் செய்ய உள்ளது தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் யோசனையை கொடுத்துள்ளதாம். இருந்தாலும், இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது என்பதுகுறிப்பிட தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version