ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.
சுத்தமாக ஓய்ந்து போய்க் கிடந்தது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத திறமையை கட்டவிழ்த்து விட்டார் சதா.
பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் திறமை களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றினார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு திறமையில் பிரளயம் செய்தார்.
தற்போது நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும்.. விரைவில் ரீ என்ட்ரி கொடுப்பேன் எனவும் உற்சாக மாகிறார் சதா.