“இந்த உடம்பை வச்சிகிட்டு கவர்ச்சி உடையா…?..” – கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில், “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். 

 

சினிமாவில் வாய்ப்புகள் குடிவந்த அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன்.

 

தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன். மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம்.

 

 

இதுவரை சினிமாவில் பெரியளவில் கவர்ச்சி காட்டாத நித்யாமேனன், சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடைய மறுபக்கத்தை காட்டி நடித்திருந்தார் அம்மணி. ஓ காதல் கண்மணி படத்தில் ஸ்லிம்மாக காட்சியளித்த நித்யா மேனன், மெர்சல் படத்தில் கொஞ்சம் குண்டானார். அதன் பிறகு மேலும் உடல் எடை கூடி, பட வாய்ப்புகளை இழந்தார். 

 

இதேபோல் இருந்தால் சினிமாவிலிருந்து காணாமல் போகவேண்டியதுதான் என்பதை புரிந்துகொண்டார். இதையடுத்து தொடர்ந்து ஜிம், டயட் என இருந்து உடல் எடையை குறைத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கில் உருவாகும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கிறார். 

 

 

இந்த படத்தில் முன்பை விட எடை குறைந்து காணப்படுகிறார். ‘உடல் எடை திடீரென அதிகரிக்க, மனநலம் பாதிக்கப்பட்டதும் காரணம். ஆனால் அதை பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. என்னை விமர்சனம் செய்வதிலேயே பலரும் குறியாக இருந்தார்கள். 

 

 

தொடர் விடாமுயற்சியால் இப்போது பழைய தோற்றத்துக்கு மாற முடிந்தது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. நல்ல கதையும் நல்ல கேரக்டரும் கொண்ட படமாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

அதுபோல் வாய்ப்பு வந்தால் மட்டுமே அதற்கு முக்கியத்துவம் தருகிறேன்’ என்றார் நித்யா மேனன். இந்நிலையில், கிருஸ்துவ மண மகள் கெட்டப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய உடல் எடையை கிண்டலடித்தவர்களுகு பதிலடி கொடுத்துள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version