பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணம் – சமூக வலைதளங்களில் எழும் கோரிக்கை..!

தமிழகத்தில் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த திட்டம் இன்றே அமலுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது. 

 

இன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் பதவி ஏற்றனர். இன்று மு க ஸ்டாலின் தனது முதல் திட்டங்களாக அறிவித்ததில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டமும் ஒன்றாகும். 

 

அதன்படி தமிழக அரசின் அனைத்து சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். இந்த திட்டம் இன்றே அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் மிகவும் மகிழ்ச்சியுடன் இன்று முதல் தங்கள் இலவச பேருந்து பயணத்தைத் தொடங்கி உள்ளனர்.

 

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் இந்துஜா ரகுநாதன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதை வரவேற்கிறேன். 

 

இந்த சலுகையை திருநங்கைகளும் பயன்பெரும் வண்ணம் நீட்டிக்க வேண்டும். பெண்களுடன்,திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அவர்கள் பேருந்தை விட்டு இறங்கவே காசு கேட்கிறார்கள்.. இதில் இலவச பயணம் வேறா என்று புலம்பியும் வருகின்றனர்.

 

இந்த கோரிக்கையை நடிகரும், இயக்குனருமான சேரன் லைக் செய்துள்ளார். இந்த கோரிக்கை மீது முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version