படுக்கையறையில் ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் – இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ஆல்யா மானசா..!

பல விமர்சனங்களை கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடிப்பிலும் தனி முத்திரை பதித்து வருகிறார் ராஜா ராணி புகழ் ஆலியா மானசா. தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளனர். 

 

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கதாநாயகியாக வந்து ரசிர்களை கவர்ந்தவர் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசா. 

 

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான வரலாற்றில் வெற்றிகரமான சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று எனவும் கூறலாம். இந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார். 

 

ஆல்யா தனது 17 வயதில் மாடலாக அவரது வாழ்க்கை பாதையை தொடங்கி சிறிது காலம் ஆர் ஜே வாக இருந்தார். பிறகு நடன பயிற்றுவிப்பாளராக இருந்த ஆல்யா அவ்வபோது வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெறும். 

 

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர். அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார். 

 

 

ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கி சில மாதங்களில் இவர்களது காதல் முறிவடைந்தது. இவர்களது பிரிவுக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக சொல்லப்பட்டாலும் ராஜா ராணி சீரியல் சஞ்சீவை காதலித்து வந்ததுதான் காரணமாக கூறப்பட்டது. 

 

 

பிறகு சில மாதங்கள் கழித்து சஞ்சீவ்-ஆல்யா திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களும் வெளியானது. இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் கணிசமாக குறைத்தார். 

 

 

தற்போது ஸ்லிம் லுக்கில் செம்ம யங்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். சீரியலுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது அரை மணி நேரமாக இருந்த ஒளிபரப்பு நேரம் ஒரு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கோங்க.

 

சீரியல், நிகழ்ச்சிகள், மாடலிங் என படு பிசியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் தினமும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது படுக்கையறையில் ஸ்லீவ் லெஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version