கணவரின் நெஞ்சில் சாய்ந்து… நெற்றியில் முத்தம் கொடுத்த ப்ரியா ராமன்..! – வைரல் புகைப்படம்..!

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் “செந்தூர பூவே’ தொடரும் ஒன்று. இதில், திரைப்பட நடிகர் ரஞ்சித் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக “தறி’ என்ற தொடரின் மூலம் அறிமுகமான ஸ்ரீநிதி நடிக்கிறார். இத்தொடரின் கதைப்படி ரஞ்சித்தின் இரண்டாவது மனைவியாகத்தான் நாயகி ஸ்ரீநிதி நடித்து வருகிறார். 

 

இந்நிலையில், ரஞ்சித்தின் முதல் மனைவியாக, பிளேஷ் பேக் காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் நடிகை ப்ரியா ராமன். ரஞ்சித் – ப்ரியா ராமன் இருவரும் நிஜ வாழ்க்கையில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 

 

கடந்த 2014-இல் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவகாரத்து பெற்றார்கள். இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் ப்ரியா ராமன். 

 

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “செம்பருத்தி’ தொடரில் அகிலா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். ரஞ்சித் – ப்ரியா ராமன் ஜோடி 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். 

 

 

சமீபத்தில் இருவரும் தங்களின் திருமண நாளை கொண்டாடியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தான், தற்போது ரஞ்சித் நடித்து வரும் “செந்தூர பூவே’ தொடரில் சிறப்பு தோற்றத்திலும் ப்ரியாராமன் நடிக்கிறார்.

 

 

இதனைப் பார்த்த ரசிகர்கள், இதே மகிழ்ச்சி உங்கள் இருவருக்கும் எப்போதும் நீடித்திருக்க வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version