தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் – பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கெளதம் கிச்லுவைத் திருமணம் செய்தார். ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் இணையத்தொடரிலும் நடித்திருந்தார்.
உமா என்கிற ஹிந்தி படமொன்றில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். சமீபத்தில், நடிகை காஜல் அகர்வால், தனது கணவர் கூறினால் மட்டுமே திரையுலகில் இருந்து விலகுவேன் என்று தெரிவித்திருந்ததாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில் விரைவில் வெள்ளித்திரையில் இருந்து விலகப்போகிறார் என்று காஜல் அதர்வாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆம் நடிகை காஜல் அகர்வால் இறுதியாக கமிட்டாகி இருக்கும் படங்களில் நடித்து முடித்து விட்டு, தனது கணவருடன் பிசினஸில் ஈடுபட போகிறார் என்று கூறுகின்றனர்.
ஆனால், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் எந்த விதமான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது பிங்க் கலர் கோட் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.