“காதல் தோல்வி…” – தத்துவ மழை பொழியும் இலியானா..!

 

நடிகை இலியானா தமிழில் “கேடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் சில காரணங்களால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்தார்.இதைத்தொடர்ந்து கடைசியாக தமிழில் “நண்பன்” படத்தில் நடித்தார்.

 

இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ,இலியானா இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.

 

அதற்கேற்றாற்போல இலியானா தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார்.

 

கோலிவுட், டோலிவுட் என படுபிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட்கு பேக்கப் செய்துகொண்டு போய் அங்கு சில வெற்றி படங்களில் நடித்துவிட்டு பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர் திடீரென லிவ்இன் டுகெதர் வாழ்கையில் புகுந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய காதலனுடன் அம்மணி போட்ட ஆட்டத்துக்கு அளவே இல்லை என்று கூறலாம். 

 

தனக்கென மார்க்கெட் சற்று குறையும் போது வழக்கமாக சில நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்புவார்கள். அந்த வரிசையில் இலியானா மட்டும் என்ன விதிவிலக்கா..?. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

 

வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வபோது காதல் குறித்த தத்துவங்களையும், வாழ்க்கை குறித்த தத்துவங்களையும் இணையத்தில் அப்லோடு செய்து வருகிறார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version