மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்தரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். கர்ணன் ரிலீஸான வேகத்தில் கார்த்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ரஜிஷா. சர்தாரில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அந்த படத்தின் மற்றொரு ஹீரோயின் ராஷி கன்னா. சர்தார் பட மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
கார்த்தி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கெத்து காட்டியிருந்தார். போஸ்டரை பார்த்த அனைவரும் இருக்கு, படத்தில் செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என்றார்கள். படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜிஷா விஜயன்.
தம்பி கார்த்தியை அடுத்து அவரின் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். இது அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ் படமாகும். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும். டிஜே ஞானவேல் இயக்கும் கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் சூர்யா கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
கௌரவத் தோற்றம் என்றால் மின்னல் வேகத்தில் வந்து செல்லும் கதாபாத்திரம் இல்லை. கூடுதல் காட்சிகளில் வருவாராம். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.
பழங்குடியின மக்களை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தில் அவர்களுக்காக போராடும் வழக்கறிஞராம் சூர்யா. படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது.படத்தில் நடிப்பதுடன், தன் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் சூர்யா.
ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதை பார்க்கும் தனுஷ் ரசிகர்களோ, எல்லாம் எங்கள் அண்ணுடன் சேர்ந்து நடித்த ராசி தான் என்கிறார்கள். இதற்கிடையே கோலிவுட் வந்த கையோடு உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாகிவிடாதீர்கள் ரஜிஷா என்று ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகைகள் என்றாலே அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக விட்ட நிலையில், ரஜிஷ-வும் அந்த விதியை பின்பற்றுகிறார்.
அந்த வகையில், உடலோடு ஒட்டிய முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தன்னுடைய சொக்க வைக்கும் பார்வையை வீசிய படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.