பொலிவுட்டின் பிரபல நடிகை வித்யா பாலன் குழந்தை போல கடல் தண்ணீரில் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் வித்யா பாலன்.
இவர் நேற்று தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவில் கடலில் சின்ன குழந்தை போன்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வித்யா பாலன் திருமணத்திற்கு பிறகும் கதைகளுக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்த வகையில், அஜித் நடித்து வரும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் மூலம், தமிழில் முதல் முறையாக நடிக்கிறார். மேலும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட உள்ள வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
‘குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன்.
இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அவரது அந்த படு மோசமான கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.