பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ படத்தில் நடித்தார்.
திருமணம் ஆகி குழைந்தை பெற்ற பின்பும் கூட.. குறையாத அழகில் திளைக்கும் அவரது லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார்.
தொடர்ந்து, தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி, காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். பின்னர், ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார்.
மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறாப்படுகிறது. தீவிரமாக பட வாய்ப்புகளை தேடாவிட்டாலும், கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
புகைப்படம் போட்டே… பட வாய்ப்பை கைப்பற்றுவது தான் அம்மணி போடும் பக்க பிளான் என திரையுலகை சேர்ந்த சிலர் கிசுகிசுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள், இளம் ரசிகர்களை சூடேறும் விதத்தில் அமைந்துள்ளது.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம் அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.