ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட சுரேகா, சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர்.
2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார்.சுரேகாவுக்கு சினிமா துறையை சேர்ந்த பலர் திருமணம் செய்ய விருப்பம் இருக்கு என தூது விடுகிறார்களாம்.
ஆனால் 20 வயதாகும் தனது மகளை ஹீரோயினாக்கும் முயற்சியில் பிஸியாக உள்ளாராம் சுரேகா.பல தெலுங்கு படங்களில் நடித்த நடிகை சுரேகா வாணி தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் ‘மெர்சல்’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகியப் படங்களிலும், அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்தார்.
மேலும் தமிழ் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வரவிருக்கும் பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.இதற்கிடையே சுரேகா வாணியின் மகள், அழகான சுப்ரிதாவும் சினிமாவில் அறிமுகமாக ஆர்வமாக இருப்பதாகவும், தொழில்முறை பயிற்சியை மேற்கொண்டு, முறைபடி தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்த சுரேகா, தற்போது மகளுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ட்ரீமும், வேக்கப்பும் பாடலுக்கு மகளுடன் மொட்டை மாடியில் இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பாட்டுக்கு ஆட்டம் போடுற வயசா உங்களுக்கு..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.