“சார்பட்டா” படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த துஷாரா விஜயனா இது..? – ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

நடிகை துஸரா விஜயன் தமிழில் போதை ஏறி புத்தி மாறி, அன்புள்ள கில்லி ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ‘சார்பட்டா’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

 

தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன். 

 

ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை போக்கும் வகையில், தாய்த்தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் துஷாரா விஜயன். அசாத்தியமான இவரது திரைப்பயணம் பலரையும் வியக்க வைக்கிறது. 

 

 

சமீபத்தில், ஒரு பேட்டியில் பேசிய இவர், உண்மையில் தமிழ் பேசும் திறமையுள்ள நடிகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைப்பது மனதிற்கு மிகபெரும் மகிழ்ச்சியை தருகிறது. 

 

 

உங்களுக்கு சினிமா மீது தீவிரமான காதலும், நல்ல திறமையும் இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு உங்களை கண்டிப்பாக வந்தடையும், நீங்கள் கண்டிப்பாக கவனிக்கப்படாமல் போக மாட்டீர்கள்.எந்த ஒரு படத்திலும் சவால் தரும் பாத்திரங்களை செய்யவே நான் விரும்புகிறேன். 

 

 

வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல், ஒரு நல்ல நடிகையாக பார்வதி திருவோது, நயன்தாரா போல மிளிரவே ஆசைப்படுகிறேன் என்றார். துஸரா விஜயன் மாடலாகவும் இருந்து வருகிறார். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் டிவி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 

ஆர்எம்கேவி, கோ-ஆப்டெக்ஸ், காமதேனு சில்க்ஸ், பச்சையப்பாஸ் சில்க்ஸ் போன்றவை இவர் நடித்த சில டிவி விளம்பரங்கள். இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version