“நேச்சுரல் ப்யூட்டி.. தக தக தங்கம் மாதிரி மின்றீங்களே” – மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

பொதுவாக கௌதம் மேனன் பட ஹீரோயின் என்றாலே ரசிகர்களுக்கு அந்த நடிகை மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக தன் படங்களின் ஹீரோயின்களை படம் பிடிப்பார் கௌதம். 

 

இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். 

 

தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. 

 

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது. 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. 

 

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம். 

 

 

இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். 

 

ஆம், தெலுங்கில் வைஷ்னவ் தேஜ் என்ற அறிமுக நடிகருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கமிட்டாகி உள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார்என்று எதிர்பார்த்தோம் ஆனால், இந்த பொண்ணு நிலைமை இப்படி ஆகிடுச்சே என்று கோலிவுட்டே வருத்தப்படுகிறது. 

 

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “நேச்சுரல் ப்யூட்டி.. தக தக தங்கம் மாதிரி மின்றீங்களே” என்று வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version