நாதஸ்வரம் சீரியல் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியவர் நடிகை ஸ்ரிதிகா. இதற்கு முன் கலசம், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரிதிகா நடிப்பில் கடைசியாக கல்யாண பரிசு 2 சீரியல் ஒளிபபராகி வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் தற்போது மகராசி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம் நடிகை ஸ்ரிதிகா. சீரியல் நடிகையாகவும், திரைப்பட நடிகையாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் ஸ்ரிதிகா ஆவார்.
இவர் பாலு தம்பி மனசிலே என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மதுரை டு சென்னை, வேங்கை, வெண்ணிலா கபடி குழு பாஞ்சா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றி பெற்ற சீரியல் நாதஸ்வரம் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் சன் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ், ஜெயா டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி உட்பட ஏராளமான தொலைக்காட்சி சீரியல் நடிகையாகவும் திரைப்பட நடிகையாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் ஸ்ரிதிகா ஆவார்.
இந்த நிலையில் வெள்ளித்திரையில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் ஸ்லிம்மாக மாறியுள்ள ஸ்ரித்திகா தனது கியூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நீச்சல் குளத்தில் நின்றபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.