“அட… அட்லியா இது..?” – மிஸ் பண்ணிடாதிங்க..! – ப்ரியா அட்லி வெளியிட்ட இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 

இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

 

இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன. 

 

இந்நிலையில் திரைக்கதையை எல்லாம் முடித்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக அட்லி படம் என்றாலே ஏதேனும் ஒரு படத்தின் காப்பியாகதான் இருக்கும் என்று ஒரு கருத்து உள்ளது. 

 

அந்த வகையில் இப்போது அட்லி எழுதியுள்ள கதை சில பல வருடங்களுக்கு முன்னர் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான பேரரசு என்ற படத்தின் கதையை ஆட்டைய போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சத்ரியன் கதையைதான் தெறி ஆக்கினார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

 

நயன்தாராவுக்கு நெருக்கமான இயக்குநர் அட்லி, ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் பண்ணுகிறார். நான் பாலிவுட் போகும் போது என்னோடு சேர்ந்து நீங்களும் வர வேண்டும் என்று நயன்தாராவிடம் கேட்டாராம். 

 

அதாவது ஷாருக்கான் ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார் அட்லி. இந்நிலையில் நயன்தாராவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, பாலிவுட் படத்தில் நடிக்க நயன்தாரா அவசரப்படவில்லை. அவர் நிச்சயம் பாலிவுட்டில் படம் பண்ணுவார். 

 

 

ஆனால் அவரின் கதபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும். அட்லி படத்தில் நடிக்க நயன்தாரா ஓகே சொல்லவில்லை. அட்லி இன்னும் ஸ்க்ரிப்ட் எழுதி முடிக்கவில்லை என்று நினைக்கிறேன். 

 

 

அவர் ஸ்க்ரிப்ட் வேலையை முடித்த பிறகே நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பது தெரிய வரும். அதுவரை, நயன்தாரா பாலிவுட் படத்தில் நடிப்பது என்பது செய்தி அல்ல வெறும் வதந்தி தான் என்றார்.

இந்நிலையில், அட்லியின் மனைவி ப்ரியா அட்லி அவர்கள் அட்லியின் இதுவரை பார்த்திடாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version