“டே.. சும்மா இர்ரா.. நாங்களே நொந்து போயிருக்கோம்..” – காற்று கூட செல்ல முடியாத அளவுக்கு நயனுடன் நெருக்கமாக விக்கி – புலம்பும் ரசிகர்கள்..!

 

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். 

 

ஒட்டுமொத்த திரையுலகமே கண் வைக்கும் அளவிற்கு காதலித்து வருகிறார்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும்.’நானும் ரவுடிதான்” படத்தின் படப்பிடிப்பின்போது நட்பாக மலர்ந்த இவர்களுடைய உறவு, மெல்ல வளர்ந்து படப்பிடிப்பு முடிவதற்குள் காதலாக வலுப்பெற்றது. 

 

கிட்ட தட்ட 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.படப்பிடிப்பு முதல் ஃபாரின் டூர் வரை விக்கி இல்லாமல் நயன் எங்குமே நகர்வது கிடையாது. காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி அந்த போட்டோக்களை வேறு அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை கடுப்பேற்றி வருகிறார். 

 

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது என்கிற செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவைப் பதிவிட்டிருக்கிறார். 

 

ஈஸ்டர் நாள் சந்தோஷமான நாள் என்று கேப்ஷனுடன் நயன்தாராவுடன் காற்று கூட செல்ல முடியாத அளவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த சிங்கிள்கள், டே.. சும்மா இர்ரா.. நாங்களே நொந்து போயிருக்கோம் என புலம்பி வருகிரார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version