திரைத்துறையை பொருத்தவரையில் தினமும் புதுமுகங்கள் அறிமுகமாகி கொண்டுதானிருக்கிறார்கள். சிலர் முதல் படங்களில் டாப்ல வருவதும் சிலர் இருந்த இடம் தெரியாமல் சென்று விடுவதும் வழக்கம் தான். ஆனால் சின்னத்திரையில் கதாநாயகி ஆகி அங்கிருந்து வெள்ளித்திரையில் வந்தவர்கள் பலர் அதில் நம்ம வாணி போஜன் ஒருவர்.
வாணி போஜன் சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். அது ஏன்னா நயன்தாரா மாதிரி க்யூட்டா மேக்கப் போடட்டாலும் கூட அழகா இருக்கிறார் இல்லையா.. அதனாலதான் இவருக்கு இந்த செல்லப் பெயர்.
ஆரம்பத்தில் வாணி ஒரு ஃபேஷன் மாடலாக தான் இருந்திருக்கிறார் . பிறகுதான் சீரியல் பக்கம் திரும்பி வந்தார்.நம்ம சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் மாடலிங்கில் கால் பதித்து அடுத்து, டி.வி. சீரியல். இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருகிறார் .
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் அழகின் உச்சம். முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சில மாதங்களுக்கு முன் OTT-யில் வெளியான லாக்கப் என்னும் படத்தில் வெங்கட் பிரபு, வைபவுடன் நடித்துள்ளார், அதன்பின் ஜெய்யுடன் ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸில் நடித்தார்.
மேலும் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் வாணி போஜன், தற்போது நீண்ட நாட்கள் கழித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் ஆள் மெலிந்து அடையாளம் தெரியாத மாதிரி இருக்கிறார். இருந்தாலும் அவரை பார்த்த ரசிகர்கள் “சும்மா தளதளன்னு இருக்கீங்களே..” என்று உருகி வருகிறார்கள்.