இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி பிரியா பவானி சங்கர். தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார். தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும்போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம். ப்ரியா பவானி சங்கர் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை ரொம்ப க்ளோஸப்பில் எடுத்து வெளியிட்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இவரையா இவ்வளவு நாள் ரசித்தோம் எனும் அளவுக்கு மனம் நொந்து போய் விட்டனர்.கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்பட மேலும் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் விஷாலின் 32-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய ஜீன்ஸ் பேண்ட் , வெள்ளை சட்டை என பக்கா கிளாசான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், மாடர்ன் ட்ரெஸ் போட்டாலும் அக்மார்க் நாட்டுக்கட்ட தான் நீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.