நடிகை சுனைனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து பின் காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா.
காதலில் விழுந்தேன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் சுனைன்னா.
காதலில் விழுந்தேன் படத்தை அடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவந்தார் சுனைனா. பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
கடைசியாக இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சுனைனா.
சமீபத்தில் அவர் சில்லு கருப்பட்டி படத்தில் சமுத்திரக்கனி மனைவியாக நடித்திருந்தார். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அவரது நடிப்பை பாராட்டி தள்ளினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீப காலமாக சினிமா மட்டுமின்றி வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சுனைனா. மேலும் ட்ரிப் என்ற படத்தில் சுனைனா நடிப்பில் வெளியானதும.
அது ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெற்றது. எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் எட்டி பார்க்க ஆரம்பித்துள்ள சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.