இந்த நடிகை தான் மேக்கப் பைத்தியம்.. அவளே சொல்லிக்குவா..! – நடிகை சைத்ரா ரெட்டி ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகைகளில் சில நடிகைகள் ஒரு சீரியலில் நடித்தாலே பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலமாகி விடுகின்றனர். அதுவும் அவர்கள் மிக அழகாக, இளமையான தோற்றத்தில் இருந்துவிட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவர்களை கொண்டாட துவங்கி விடுகின்றனர்.

அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் வலிமை படத்தில் அஜீத்குமாருடன் சில காட்சிகளில் நடித்திருப்பார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததாக தெரியவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சித்து. அவரது மனைவி ஸ்ரேயா. அவரும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, சைத்ரா ரெட்டி என அனைவருமே நெருங்கிய நண்பர்கள்தான். அதனால் சீரியல் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், சந்தித்துக் கொள்வதும், வெளியிடங்களுக்கு செல்வதுமாக நட்பை பலப்படுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சைத்ரா ரெட்டி, நான் ஒரு மேக்கப் பைத்தியம் என்று ஸ்ரேயா, அவளே அவளை சொல்லிக்கொள்வாள். அவள் மேக்கப் இல்லாமலேயே ரொம்ப அழகாக இருப்பாள். அழகா தான் இருக்கறே என்று சொன்னால், நம்பாமல் இல்லை என்பாள்.

எங்கேயாவது வெளியிடங்களுக்கு சென்றால், கண்ணுக்கு மேல் ஐ ஷேடோவும், லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொள்வாள். அதுதான் மேக்கப் பைத்தியம் என்று கூறியிருக்கிறார் சைத்ரா ரெட்டி. சக நடிகையாக, தோழியாக இருந்தாலும் அவரை மேக்கப் பைத்தியம் என, சைத்ரா ரெட்டி விமர்சித்திருப்பது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version