எனக்கு இருக்கற பிரச்சனை பத்தி தெரியுமா..? சின்மயி கேள்விக்கு லியோ இயக்குனர் பதில்..!

ஒரு பாடகியாக அனைவரும் அறிந்த பிரபலமாக இருப்பவர் சின்மயி. வானொலி தொகுப்பாளர், மொழி பெயர்ப்பாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற அடையாளங்களை கொண்டவர்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல்தான், சின்மயிக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் பாடி முன்னிலை பாடகியாக ரசிக்கப்பட்டார்.

பாடகியாக மட்டுமின்றி பின்னணி குரல் கலைஞராக பல முக்கிய படங்களில், கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தவர் சின்மயி.

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லா, சத்தம் போடாதே படத்தில் பத்மபரியா, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகர்ஜி, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாவத் ஆகியோருக்கு பேசியது சின்மயி தான்.

சக்கரக்கட்டி படத்தில் வேதிகா, வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டி என அவர்களது குரலாக பின்னணியில் ஒலித்ததும் சின்மயி குரல்தான்.

ஏஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியவர் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.

சின்மயி அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வம்புகளில் சிக்கிக் கொள்பவர். இது அவரது வாடிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் சின்மயி.

கடந்த 2004ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை விழா ஒன்றுக்கு சென்றிருந்த போது, வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் சின்மயி.

சின்மயி

சின்மயி பாடகியாக, பின்னணி குரல் கலைஞராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பன்முக தன்மை கொண்டவராக இருந்து வருகிறார்.

கடந்தாண்டில் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார்.

லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக நடிகை சின்மயியை அனுப்பியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்

ரெட்கார்டு

அப்போது அவரிடம், சார் சினிமாவில் எனக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறார்கள்.. மறைமுகமான தடை என் மீது இருக்கிறது. இதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சின்மயி.

இதனை கேட்ட லோகேஷ் கனகராஜ், பாத்துக்கலாம் மேடம் என்று ஒரே வார்த்தையில் சின்மயியை கூல் செய்து படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதனை பாடகி சின்மயி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

எனக்கு இருக்கற ரெட்கார்டு பிரச்சனை பத்தி தெரியுமா, என்ற சின்மயி கேள்விக்கு லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பாத்துக்கலாம் மேடம் என்ற பதிலில் கூல் செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version