விஜய் டிவி மூலம் பிரபலமான குக் வித் கோமாளி புகழ் சமீபத்தில் நடிகர் கமலஹாசனை மரண பங்கம் செய்திருக்கக் கூடிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமலஹாசன் போட்டியாளர் மாயாவின் சார்பாக ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார்.
மாயாவுக்கு ஆதரவாகவே அவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன. மாயா எதை செய்தாலும் அதனை கண்டு கொள்வதில்லை அல்லது மாயா அப்படி செய்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறது இந்த போட்டியாளர் இப்படி செய்ததால் தான் மாயா அப்படி நடந்து கொண்டார் என்று மாயாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பேசி வந்தார்.
இது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது போட்டியாளர் அர்ச்சனா பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சிகள் பிரபலமான புகழ் நடிகர் கமலஹாசனை பங்கம் செய்யும் விதமாக மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இதனால் நடிகர் புகழின் சினிமா வாழ்க்கைக்கு ஏதும் ஆபத்து வராமல் இருந்தால் சரி தான்.
ஆனால் கமலஹாசன் இதனை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்..? என்பதை பொறுத்ததுதான் பார்க்க வேண்டும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.