2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
திரையுலகில் லாக்டவுன் சமயத்தில் இருந்து போட்டோஷூட் என்ற ஒன்று வைரலாகி வருகிறது. பல படங்களில் வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் கூட இந்த போட்டோஷூட்டால் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அதிக புகழை பெற்று விடுகின்றனர்.
முதலில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகி வந்தனர்.ஆனால் டிக்டாக்கை முடக்கியதால் அனைவருமே இந்த போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளனர். நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளனர்.
வெள்ளித்திரையில் மட்டும்மல்ல சின்னத்திரையிலும் பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நிவேதா பெத்துராஜின் கவர்ச்சியான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் Dairy Milk சாக்லேட்… டஸ்க்கி குயின்.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.