திவ்யதர்ஷினிக்கு 2வது திருமணம்..? அவரது சகோதரி பிரியதர்ஷினி வெளியிட்ட தகவல்..!

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் தகவல்கள் வெளியாவது வாடிக்கை.

பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் திவ்யதர்ஷினி பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.. திவ்யதர்ஷினி பிரபல சமையல் கலைஞரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் திவ்யதர்ஷினி.. என்றெல்லாம் கூட செய்திகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

இந்நிலையில், இப்படியான செய்திகள் குறித்து பிரபல நடிகையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் உடன்பிறந்த சகோதரியுமான பிரியதர்ஷினியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பிரியதர்ஷினி.. இப்படியான செய்திகள் வெளியாகும் போது யாருப்பா அந்த தொழிலதிபர் என்று எங்களுக்கு தோன்றும்.

ஆரம்பத்தில் ஒரு விதமான கோபமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்படியான செய்திகளை பார்த்து சிரிப்பு வரத் தொடங்கி விட்டது. இப்படியான செய்திகளை சிரித்து விட்டு கடந்து விடுகிறோம்.

ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவில்லை.. இப்பொழுது எனக்கு திருமணம் ஆகிறது என்றால் எனக்கு இன்னாருடன் திருமணம் ஆகிறது அதனை நான் கூறப்போகிறேன்.

ஆனால் எனக்கு திருமணமே இல்லை என்ற சூழ்நிலையில்.. இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்… அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்… என்ற செய்திகள் எப்படி இணையத்தில் வெளியாகிறது.

அதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது.. எழுதுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது..? என்ற கேள்வி எல்லாம் எனக்குள் எழும்.. ஆனால்.. தற்போது இப்படி ஆன கேள்விகளை இப்படியான செய்திகளை எல்லாம் கடந்து செல்ல நாங்கள் பழகிவிட்டோம் என கூறியிருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version