விவாகரத்திற்கான காரணம் இது தான்..! – முதன் முறையாக வாயை திறந்து கூறிய DD..! – சோகத்தில் ரசிகரகள்..!

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ளவர் திவ்ய தர்ஷினி. ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் செல்லமாக டிடி என அழைக்கப்படும் இவர், திரைத்துறையில் ஏராளமாக நண்பர்களை வைத்துள்ளார். 

 

மேலும் ஒரு சில திரைப்படங்களில் நாயகியின் சகோதரி, நண்பர் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இவர், தனுஷ் இயக்குநராக அறிமுகமான ப.பாண்டி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அதிகப்படியான ரசிகர்களை பெற்றார். 

 

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைகாதல் திருமணம் செய்துகொண்ட அவர், சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த அவர், 2017-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார். 

 

திடீர் கவர்ச்சி அவதாரம்

 

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் டிடி, திடீரென சமீப காலமாக நடிகைகளுக்கு இணையாக மார்டன் மற்றும் பிகினி உடைகளில் போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

 

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். 

 

 

அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது. தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான். 

 

விவாகரத்தில் முடிந்த திருமணம்

 

அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

 

 

அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது. 

 

திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி.இந்நிலையில், முதன் முறையாக தனது விவாகரத்திற்கான காரணத்தை சூசகமாக கூறியுள்ளார் திவ்யதர்ஷினி. 

 

தவறான பொருளை கீழே வைத்துவிடுங்கள்

 

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய அவர் கேர்ள்ஸோ பாய்ஸோ யாரோ, நீங்க தப்பான ஒரு பொருளை கையில எடுத்துட்டீங்கன்னா, அது தப்புன்னு தெரிஞ்சா யோசிக்காம அதை கீழ வச்சுடுங்க. அய்யோ நம்ம கீழ வைக்கலன்னா அவன் ஏதாவது சொல்லிடுவான், இவன் ஏதாவது சொல்லிடுவானோன்னு அதை கையிலேயே வச்சுருக்காதீங்க. அது உங்கள் வாழ்க்கையை எடுத்துடும். 

 

 

அவன் பேசிருவானோ இவன் பேசிருவானோன்னு பயந்து கீழ் வைக்காம இருக்கீங்கல்ல, நீங்க வச்சதுக்கு அப்புறம் எவனும் அதைப்பத்தி யோசிக்கக்கூட மாட்டான். ரெண்டு நாள்தான். தயவு செய்து தப்பான பொருள எடுத்திங்கன்னா தயவு செய்து வச்சுருங்க என உருக்கமாக பேசியுள்ளார்.

 

DD-யின் இந்த பேச்சை கேட்ட பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், தன்னுடைய கணவரை தான் தவறான பொருளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version