என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல.. கடைசியா.. இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சு..! தேவயானி வேதனை..!

கடந்த 1990களில் நடிகை தேவயானி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஹோம்லி லுக்கில் நடிக்க வேண்டிய கேரக்டர் என்றால், நிச்சயம் இயக்குநர்கள் முதல் வாய்ப்பாக அது தேவயானியை தான் அதற்கு தேர்வு செய்வார்கள்.

அந்தளவுக்கு அவரது குடும்பப்பாங்கான தோற்றமும், லட்சணமான முகமும் பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜகுமாரனை காதல் திருமணம் செய்ய தேவயானி முடிவெடுத்து, திருமணமும் செய்துக்கொண்டார்.

அப்போது ராஜகுமாரன் இயக்குநராக இரண்டு படங்களை இயக்கி இருந்தார். அதில் அவரது முதல் படமான நீ வருவாய் என மாபெரும் வெற்றி பெற்றது. 2வது படமான விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தோல்வியடைந்தது. இந்த இரண்டு படத்திலும் கதாநாயகி தேவயானிதான்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த தேவயானியை, இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்ய, அவரது பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எப்போதுமே, பொன் முட்டையிடும் வாத்து போல, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் மகளை, நடிகையை உடனே திருமணம் செய்து கொடுக்க யாரும் விரும்புவதில்லை.

இதுகுறித்து நடிகை தேவயானி ஒரு நேர்காணலில் கூறுகையில், ராஜகுமாரனை பிடித்திருக்கிறது என்று என் விருப்பத்தை அம்மா, அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை கன்வின்ஸ் பண்ண முடியவில்லை.

அதுக்கு அப்புறம் என்ன பண்ண முடியும்? பூஜை ரூமில் இருக்கிற சாமிகிட்ட போய் வேண்டிகிட்டேன். அவரை எனக்கு பிடிச்சிருக்கு. அவரை தான் நான் கல்யாணம் பண்ணணும். நீதான் எப்பவும் என்கூட துணையா, கூடவே இருக்கணும் என்று வேண்டிகிட்டேன்.

நீதான் எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும். எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை. இந்த மாதிரி நேரத்துல சாமிகிட்ட தான் உதவி கேட்க முடியும். சாமிதான் சப்போர்ட் பண்ணும். அதனால், அந்த கடவுளோட சப்போர்ட்லதான் எங்க கல்யாணம் நடந்தது, என்று கூறியிருக்கிறார் நடிகை தேவயானி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version