பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் பல்வேறு நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றிருக்கும் இவர் பல்வேறு சீடர்களில் ஹீரோயினாகவும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் பங்கு பெறும் வாய்ப்பு பறிபோனது பற்றி தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார்.
டப்பிங் ஆர்டிஸ்டான தேவிப்பிரியா வை விக்ரம் படத்தில் இடம்பெற்ற ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்க அழைத்திருக்கிறார்கள்.
இதற்காக ஆடிஷனும் நடத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு டப்பிங் ஆர்டிஸ்டுகள் இந்த டப்பிங் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
எந்த ஆடிஷனாக இருந்தாலும் அதில் நான் தேர்வாகி விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கும். அதே போல தான் விக்ரம் திரைப்படத்திலும் ஏஜென்ட் டீனாவிற்கு நான் குரல் கொடுப்பேன். எப்படியாவது கமல்ஹாசன் படத்தில் நம்முடைய பங்களிப்பும் இருக்கும் என்ற ஆசையுடனும் நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
ஆனால், என்னுடைய குரல் சின்னதாக இருக்கிறது.. பெரிய பொம்பள போல குரல் வேண்டும்.. என்று கூறினார்கள். எனக்கு அப்படி பேச வரவில்லை.. அதனால் அந்த வாய்ப்பு பறிபோய் விட்டது.. என தன்னுடைய வேதனையை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா.