படவாய்ப்புக்காக இதை பண்ணவும் ரெடி.. வெளிப்படையாக கூறிய திவ்யா துரைசாமி..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி திரைப்படங்களில் செய்தியாளராகவே சில படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் முழுநேர நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் சூர்யா நடிகர் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் திவ்யா துரைசாமி இணைய பக்கங்களில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதில் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர் நான் புகைப்படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்த்து இந்தப் பெண் இப்படித்தான் என்று உங்களுக்குள் ஒரு கற்பனை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால் அது நான் கிடையாது. அது திரைப்பட வாய்ப்புக்காக ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ…? அதை கொடுப்பதற்காக நான் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் தானே தவிர அந்த புகைப்படங்களை பார்த்து என்னுடைய தனிப்பட்ட குணாதிசயத்தை கற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.

மேலும், பட வாய்ப்புக்காக ஐட்டம் பாடலுக்கு நடனமாட நீங்கள் தயாரா..? நடிகை சமந்தா நடிகை நயன்தாரா கூட ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவுக்கு இறங்கி பணியாற்றுகிறார்கள். நீங்கள் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு தயாரா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த திவ்யா துரைசாமி, சமந்தா நயன்தாரா ஆகியோர் அவர்களுக்கு பிடித்திருப்பதால் தான் அவரை செய்கிறார்கள். எனக்கு எனக்கு பிடித்த ஹீரோக்களுடன் இப்படியான வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நானும் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

எப்படியான எந்த ஹீரோக்களை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டதற்கு அது பெரிய பட்டியலே போகிறது. தளபதியை பிடிக்கும் தலையை பிடிக்கும் சொன்னால் ஏதோ பொய்யாக சொல்வது போல் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.

எனக்கு நடிகர் விஜய்யையும் பிடிக்கும் நடிகர் அஜித்தையும் பிடிக்கும் தனுஷ் பிடிக்கும் சூர்யாவை பிடிக்கும் நடிகர் கார்த்தியை பிடிக்கும் இப்படி பல நடிகர்கள் எனக்கு பிடிக்கும். என்னை ஐட்டம் டான்ஸ் ஆட சொல்லி அழைக்க மாட்டார்கள் அப்படி அழைத்தால் கண்டிப்பாக நான் ஆடுவேன் என கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version