“அதில் ரச்சிதாவுக்கு இஷ்டம் இல்ல..” ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷின் பெற்றோர்..!

திரை உலகில் மட்டுமல்ல சின்னத்திரையில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் முன்னணி நடிகராகவும், நடிகையாகவும் திகழ்ந்தவர்கள் தினேஷ் மற்றும் ரச்சிதா.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும் இந்த நிகழ்வினை சரிப்படுத்த தினேஷின் பெற்றோர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது என புலம்பி இருக்கிறார்கள்.

ரச்சிதா பெங்களூருவில் பிறந்திருந்தாலும், தமிழ் மக்களால் அதிகளவு நேசிக்கப்படும் சீரியல் நடிகையானார். ரச்சிதா கன்னட மொழியில் வெளியான நிகழ்ச்சியின் மூலம் 2007 ஆம் ஆண்டு கலை துறையில் களம் கண்டார்.

மேலும் இவர் தமிழ் மொழியில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என பல முன்னணி சேனல்களில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் வீட்டில் அவரும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார். இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு தன்னை போல் சீரியலில் நடிக்கும் தினேஷ் கோபாலசாமியை திருமணம் செய்து கொண்டார்.

எனினும் காலத்தின் கோலத்தால் இருவரும் பிரிந்து வாழக்கூடிய நிலையில் மீண்டும் இணைந்து வாழ மாட்டார்களா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கக் கூடிய வேளையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் மீண்டும் இவர்கள் ஒன்று சேர முடியாத படி இடைவெளியை சற்று கூடுதல் ஆக்கி விட்டது.

இந்நிலையில் தினேஷின் பெற்றோர்கள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி  அளித்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் தினேஷ் மற்றும் ரச்சிதா காதலித்த பிறகு பெற்றோரின் சம்மதத்தோடு தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

எட்டு ஆண்டு காலமாக நல்ல புரிதலோடு வாழ்ந்து வந்த இவர்கள் தேவையில்லாத விவகாரத்தால் தன் மகனை விட்டு பிரிந்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இரு விட்டாரும் பெரும் முயற்சிகளை எடுத்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க, சமரசம் பேசிய போதும் ரச்சிதா எதற்கும் உடன்படுவது போல் தெரியவில்லை என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

மேலும் தினேஷின் பெற்றோர்களின் பேச்சுக்கு ரச்சிதா மதிப்பு கொடுத்ததாக தெரியவில்லை என்றும் அவர் தினேஷை விட்டு பிரியவே ஆசைப்படுவதால் இனி என்ன முயற்சி எடுத்தாலும் அவர்கள் சேர்ந்து வாழ்வது என்பது கானல் நீர் தான்.

இதனை அடுத்து நாங்கள் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஒரே குழப்பமாகவே உள்ளது. என் மகன் மிகவும் நல்லவன். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவன் சீரியல்களில் நடித்தாலும் சரி, நடிக்காவிட்டாலும் சரி எங்களோடு வந்து இருந்தாலே போதும் எனக் கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர்களது வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து கேட்டாலும் அதை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று மனம் நொந்து அவர் பெற்றோர் பேசி இருப்பது பேர் அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version