“ஸ்ரேயா ரெட்டிக்கு அது..” விஷால் காட்டிய வேலை.. திமிரு பட இயக்குனர் கூறிய ஷாக் தகவல்..!

செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனான நடிகர் விஷால் தனது முதல் படத்தில் நடித்ததை அடுத்து தாமிரபரணி, சண்டைக்கோழி போன்ற படங்களில் நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அடுத்த பல வெற்றி படங்களை கொடுத்த இவர் சத்தியம், வெடி போன்ற படங்களில் அதிக அளவு சோபிக்கவில்லை. இந்த படங்கள் தோல்வியை தந்தது. இதனை அடுத்து தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி திரைப்படங்களை தானாகவே தயாரித்து அதில் நடிக்கவும் ஆரம்பித்தார்.

அதில் குறிப்பாக இவர் நடிப்பில், இவரது தயாரிப்பில் வெளி வந்த பாண்டியநாடு, துப்பறிவாளன் போன்ற படங்கள் கலவை ரீதியான விமர்சனங்களை கொடுத்தது. இதனை அடுத்து அண்மையில் நடித்து வெளி வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் இவருக்கு ஒரு கம்பேக் படம் எனக் கூறலாம்.

எப்போதுமே விஷால் எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த திமிரு படத்தின் இயக்குனருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதைப்பற்றி தற்போது இயக்குனர் தருண் கோபி அண்மை பேட்டியில் பேசி இருக்கிறார். அந்தப் பேச்சில் திமிரு படத்தின் படப்பிடிப்பு பட இடங்களில் எடுக்க வேண்டி இருந்ததால் விஷால் தன்னை தவறாக புரிந்து கொண்டு எனக்கு படம் இயக்கத் தெரியாது என நினைத்தார்.

மேலும் அந்தப் படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி காட்சிகளை மக்கள் கைதட்டி வரவேற்றதால் ஸ்ரேயா ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது விஷாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து விஷால் என்னிடம் பட காட்சிகள் முடிந்த பின் படத்தின் எடிட்டிங் பொறுப்பை தான் பார்த்துக் கொள்வேன் என இயக்குனரிடம் கூறியிருக்கிறார். எனக்கு என்ன எடிட்டிங் கூட தெரியாமலா இருக்கும் என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டதோடு அவரிடம் இது பற்றி பேசினேன். இதனால் எங்கள் இருவருக்குள்ளும் சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.

எப்போதும் வளர்த்த வரை நினைத்துப் பார்க்க வேண்டும் என தனது ஆதங்கத்தை இயக்குனர் தருண் கோபி பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பேட்டியை பற்றி ரசிகர்கள் பலரும் அவர்களுக்குள் பேசி வருவதோடு இணையத்தில் அதிகமாக பார்க்கப்படுகின்ற பேட்டிகளில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version