முதல் நாளே என்னை தூக்கி தொங்கவிட்டாரு.. பிரபல நடிகர் குறித்து திவ்யா துரைசாமி..!

பிரபல நடிகை திவ்யா துரைசாமி சமீபத்திய பேட்டி ஒன்று முதன் முறையாக படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நான் நடிக்க சென்ற முதல் நாளே சூர்யா என்னை தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு நடப்பது போன்ற காட்சி.

அந்த காட்சியை படமாக்கும் முன்பு அந்த காட்சி எப்படி வரப்போகிறது என்பதை போட்டோ சூட் எடுத்தார்கள்.

அப்போது சூர்யா என்னை அவருடைய தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு நடக்க வேண்டும் என்று இயக்குனர் கூறிய போது நான் கொழுகொழுவென இருக்கிறேன்.

உடல் எடை அதிகமாக இருக்கிறேன். என்னை சூர்யா தூக்கி தோள் மீது போட்டுக் கொள்வாரா…? என்ற அச்சம் இருந்தது.. ஒரு விதமான பயமும் இருந்தது.

ஆனால் சூர்யா சார் அசால்டாக என்னை தோள்மேல் தூக்கிப்போட்டு கொண்டார். நடக்கவும் ஆரம்பித்து விட்டார். மேலும், உங்களுக்கு ஏதாவது சிரமமாக இருந்தால் சொல்லுங்கள் வலித்தாலோ அல்லது அசவுகரிமாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் நாம் காட்சியை கட் செய்து கட் செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

அவர் கூறுவதை எல்லாம் நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆனால் நிஜமாகவே நான் சூர்யா முன் தான் நின்று கொண்டிருக்கிறேனா..? அவர் தான் என்னை தோளில் தூக்கி போட்டு நடக்கிறாரா..? என்றெல்லாம் நம்பவே முடியவில்லை.

சூர்யா மீது தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் மனதில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம் இதுதான் என பதிவு செய்திருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version